ADDED : மே 09, 2026 05:03 AM
சென்னை: சென்னை அடுத்த அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 600 மெகாவாட் திறன் உடைய, இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
விரிவாக்க மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் ஜெனரேட்டர் பழுதால், கடந்த ஏப்., 16ம் தேதி இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் கோடை வெயிலால் வீடுகளில், 'ஏசி' சாதனங்களின் பயன்பாடு அதிகம் இருப்பதால், அதற்கு ஏற்ப மின் தேவையும் அதிகரித்துள்ளது.
'கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் நிலையங்களில் பழுது ஏற்பட்டால், விரைந்து சரி செய்ய வேண்டும்' என்று, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டிருந்தது. அதேசமயம், விரிவாக்க மின் நிலையத்தில் மூன்று வாரங்களாகியும் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், உற்பத்தி தொடங்கவில்லை.
