ADDED : நவ 13, 2024 01:27 PM

கோவை: கேரளா, பாலக்காட்டைச் சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி சுரேஷ் என்பவரை கோவை மாவட்டம் க.க.சாவடியில் வழிப்பறி செய்து 54 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுமித் நாகேஷ், 25, சனீஸ் கோவிந்தன் 35, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் கே.ஜி. சாவடி காவல் நிலைய பகுதியில் பாலக்காடு சேர்ந்த சுரேஷ் (45) வேலந்ததாவளம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரிடம் மர்மநபர்கள் ரூ.54 லட்சத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுமித் நாகேஷ், 25, சனீஸ் கோவிந்தன் 35, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 41 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியங்கள் காக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

