ADDED : செப் 19, 2024 07:32 AM

புதுக்கோட்டை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் பா.ஜ., ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகினால், தி.மு.க.,வின் 22 எம்.பி.,க்களும் பா.ஜ.,வுக்கு முட்டுக்கொடுக்க சென்று விடுவர்.
விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க., பங்கேற்றால், அங்கு சென்று அவர்கள் என்ன பேசுவார்கள்? நினைத்தாலே காமெடியாகத்தான் இருக்கிறது. மதுவை ஒழிக்க வேண்டும் என அவர்களாலும் எப்படி பேச முடியும்?
ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள். தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டும்.
நாங்கள் 2026லும் தனித்துதான் போட்டியிடுவோம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால், எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்களால்தான் எப்போதுமே, மற்றவர்களுக்கு பாதிப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.

