ADDED : ஜன 19, 2024 02:17 AM
கோவை:கோவை விமான நிலையத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில், மசூதியை இடித்து கோவில் கட்டியதாக கூறும் உதயநிதி, வரலாற்றை படிக்க வேண்டும். நீதிபதிகள் அளித்த தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதலின்படி தான் ராமர் கோவில் கட்டப்படுகிறது.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பல கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இடிப்பதை பற்றி பேச உதயநிதிக்கு தகுதி இல்லை.
மாநில அரசு சொல்வதற்கெல்லாம் கவர்னர் ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்க முடியாது. அரசியலமைப்புக்கு உட்பட்டு தான் கவர்னர் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. வரம்பு மீறி செயல்பட்டதாக சொல்லவில்லை.
கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட நாடகம் தான், '2ஜி' அலைக்கற்றை வழக்கு. இந்த ஆடியோவுக்கு, தி.மு.க.,வினர் பதில் சொல்ல வேண்டும்.
மக்கள் மன்றத்தில், மேலும் ஒன்பது ஆடியோக்களை வைக்க உள்ளோம். எனக்கு முதல்வராக வேண்டும் என்ற ஆசை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

