sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உண்மையை சொன்ன கார்த்திக்கு நோட்டீஸா?: அண்ணாமலை

/

உண்மையை சொன்ன கார்த்திக்கு நோட்டீஸா?: அண்ணாமலை

உண்மையை சொன்ன கார்த்திக்கு நோட்டீஸா?: அண்ணாமலை

உண்மையை சொன்ன கார்த்திக்கு நோட்டீஸா?: அண்ணாமலை


ADDED : ஜன 12, 2024 03:13 AM

Google News

ADDED : ஜன 12, 2024 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேர, சோழ மன்னர்களால் ஆளப்பட்ட சங்க காலப் பகுதியான பர்கூர்; புகழ்பெற்ற ஹனுமன் தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவில் அமைந்திருக்கும் ஊத்தங்கரை மற்றும் கிருஷ்ணகிரி சட்டசபைத் தொகுதிகளில் பாதயாத்திரை சிறப்பாக நடந்தது.

ரூ.8 லட்சம் கோடி


விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய், நுாறு நாள் வேலை திட்ட சம்பளம், மானியங்கள், முத்ரா கடன் உதவி என, அனைத்துத் திட்டங்களையும் பொது மக்கள் நேரடியாக பயன் பெறும் வகையில், வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டு, அதன்படி மத்திய அரசு திட்டங்களை சிறப்பாக செயல்பட வழிவகை செய்திருக்கிறார் பிரதமர் மோடி.

இதனால், இடைத்தரகர்கள், ஊழல், லஞ்சம், கமிஷன் எதுவும் இல்லாமல் திட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் கோடி ரூபாய், இப்படி மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

ஆனால், தி.மு.க., அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு பணமான 1,000 ரூபாயை வாங்க வேண்டும் என்றால், தி.மு.க., கிளை செயலர் தயவை நாட வேண்டியுள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு வாரவாரம் பாராட்டு விழா நடத்தியது தான், தமிழக அரசு தமிழ் மொழியை வளர்த்த முறை. கடந்த ஆண்டு, 55,000 குழந்தைகள் தமிழ் மொழித் தேர்வில் தோல்வியடைந்திருப்பது குறித்து சொன்னால், அதை காதில் வாங்க மாட்டார்கள்.

அரசுக்கு மனமில்லை

ராகுலும், உதயநிதியும் வாரிசு அரசியலின் மிச்ச அடையாளங்கள். இருவரையும் என்ன தான் முன்னிலைப்படுத்தினாலும், அவர்களால் அரசியலில் உச்சபட்சமாக வர முடியாது.

அதைத்தான் காங்கிரஸ் எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம், 'பிரதமர் மோடியை வெல்ல ராகுலால் முடியாது' என்று உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார். இதற்கு கட்சியில் இருந்து 'நோட்டீஸ்' அனுப்பியிருக்கின்றனர்.

மாங்கனி மாவட்டம் என்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெயர் வருவதற்கு காரணமே ஊத்தங்கரை, மத்துார், போச்சம்பள்ளி போன்ற பகுதிகளில், 50,000 ஹெக்டரில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுவதால் தான்.

சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் பனை மர வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இவர்களின் முக்கிய வாழ்வாதாரமே பனை வெல்லம் தான். வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, பனை வெல்லம் கொள்முதல் செய்யப்படும் என்ற வாக்குறுதியை, இன்று வரை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.

கடந்த ஆண்டு ஜூலையில், பா.ஜ., சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையில், பனை மரம் ஏறுவது, கள் இறக்குவது போன்ற பனை சார்ந்த தொழில்களை, அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்; ஆனால், அரசுக்கு மனமில்லை.

செயல்படுத்தாத அறிக்கை

கடந்த 2009ம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி கு.ப.சிவசுப்பிரமணியம் குழுவின் அறிக்கை, 'கேடு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு தயாரிக்கப்படும் வெளிநாட்டு வகை மதுபானங்களை அனுமதிக்கும்போது, குறைந்த பாதிப்பு கொண்ட கள்ளை தடை செய்வதை நியாயப்படுத்த முடியாது' எனக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், தி.மு.க.,வினர் நடத்தும் சாராய ஆலைகள் வருமானத்துக்காக, இந்த அறிக்கையை அரசு ஏற்று செயல்படுத்தவில்லை.

ஓசூர் - தர்மபுரி இடையே, தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 1,331 கோடி ரூபாய் உள்ளிட்ட, பல கோடி ரூபாய்க்கான மத்திய அரசு திட்டங்கள் கிருஷ்ணகிரியில் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

 ஊத்தங்கரையில் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தல்

 போச்சம்பள்ளி -சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்புத் தொழிற்சாலை

 போச்சம்பள்ளியில் கனிமப் பொருள் ஏற்றுமதி மையம், பூக்கள் ஏற்றுமதி மையம்

 போச்சம்பள்ளி -மருதேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் என கொடுத்த எந்த வாக்குறுதியையும், தி.மு.க., நிறைவேற்றவில்லை.

சட்டப் போராட்டம்

பஞ்சமி நிலத்தில் தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் அலுவலகம் அமைந்திருக்கிறது. அந்த நிலத்தை தலித் மக்களிடமே திருப்பி அளிக்கும் வரை, பா.ஜ.,வின் சட்டப் போராட்டம் ஓயாது.

பயணம் தொடரும்...






      Dinamalar
      Follow us