ADDED : செப் 09, 2025 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உச்ச நீதிமன்றத்தில், பா.ஜ., வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'தமிழகம், அசாம், கேரளா மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளன.
'இதையடுத்து அந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது பதில் அளிக்கும்படி, தேர்தல் ஆணையம், தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-- டில்லி சிறப்பு நிருபர் -