தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ முறைசாரா தொழிலாளர்களுக்காக 'என்.பி.எஸ்., சஞ்சய்' திட்டம் அறிமுகம்

 முறைசாரா தொழிலாளர்களுக்காக 'என்.பி.எஸ்., சஞ்சய்' திட்டம் அறிமுகம்

 முறைசாரா தொழிலாளர்களுக்காக 'என்.பி.எஸ்., சஞ்சய்' திட்டம் அறிமுகம்


ADDED : மே 12, 2026 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 12:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ ந்தியாவின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 90 சதவீதம் பேர் முறைசாரா தொழிலாளர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஓய்வூதிய வசதி கிடைப்பதை உறுதி செய்ய, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணை யம், 'என்.பி.எஸ்., சஞ்சய்' எனும் எளிமைப்படுத்தப்பட்ட புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக, கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் உள்ள தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய பலன்களை எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்


* வயது 18 முதல் 85 வரையுள்ள எந்தவொரு இந்திய குடிமகனும் இதில் சேரலாம்

* குறிப்பாக, மாத சம்பளம் வாங்காதவர்கள் மற்றும் நிதி திட்டமிடல் குறித்து அதிக விழிப்புணர்வு இல்லாதவர்கள் சேரலாம்

* வழக்கமான என்.பி.எஸ்., திட்டத்தில் உள்ள சிக்கலான முதலீட்டு தேர்வுகள் இதில் குறைப்பு

* அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், சேவை மையங்கள் அல்லது ஆன்லைன் தளம் வழியாக 'கே.ஒய்.சி.,' நடைமுறைகளை முடித்து இத்திட்டத்தில் இணையலாம்

*முதலீட்டாளர்கள் விரும்பினால் பின்னாளில் தங்களின் 'பென்ஷன் பண்டு மேலாளரை' மாற்றிக்கொள்ளலாம்

* என்.பி.எஸ்., வாட்சல்யா மற்றும் பிற பொதுவான என்.பி.எஸ்., திட்டங்களில் உள்ள குறைந்தபட்ச கட்டணங்களே இதற்கும் பொருந்தும்

*பணத்தை திரும்ப பெறுதல் மற்றும் வெளியேறுதல் நடவடிக்கைகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தேசிய ஓய்வூதிய திட்டத்தின் 'என்.பி.எஸ்., 2015' விதிகள் இதற்கும் பொருந்தும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us