நடிகரை பார்க்க போய் செத்தவர்களுக்கு போட்டி போட்டு காசு தராங்க; சீமான்
நடிகரை பார்க்க போய் செத்தவர்களுக்கு போட்டி போட்டு காசு தராங்க; சீமான்
ADDED : அக் 17, 2025 07:48 PM

சேலம்: 'கள்ளச்சாராயம் குடித்தும், நடிகரை பார்க்க போயும் இறந்தவர்களுக்கு போட்டி போட்டு காசு தருகிறார்கள்' என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சேலத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;
ஆந்திராவில் காட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை இதே சந்திரபாபு நாயுடு சுட்டார். வறுமையினால் செம்மரக்கட்டையை வெட்ட வந்தோம் என்பது தான் காரணம். நாங்கள் வெட்டும்போது (மரத்தைச் சொல்கிறார்)சான்றுகளோடு பிடிக்கவில்லை.
நாங்கள் ஒன்றும் பன்னாட்டு பயங்கரவாதிகள் அல்ல, பக்கத்தில் உள்ள ஒரு மாநில மக்கள்தான். மனச்சான்றுடன் எல்லோரும் பாருங்கள். எங்களை கைது பண்ணி சிறையில் அடைக்கலாம். நாங்கள் வழக்காடி உயிரோடு வெளியே வரலாம்.
ஆனால் எதுக்காக சுட்டு, சடலத்தை அப்படியே போட்டு உடைகளை கழற்றி, விறகு கட்டையில் ஒரு எண்ணெய், எங்கள் கால்களில் ஒரு எண்ணெய் போட்டு மரக்கட்டையும், தமிழரின் உயிரும் ஒன்று என்றால் அதை இந்த நாட்டில் உள்ள ஒருத்தர் கேட்டிருப்பாரா?
அந்த செத்த குடும்பத்திற்கு இந்த நாடு கொடுத்த காசு எவ்வளவு? பசிக்காக தானே பிழைக்க போனே? வெட்ட வந்த கூலி எங்கள் மாநிலத்தவன் தான். வெட்டிய இத்தனை முதலாளி எங்கே இருந்தார்கள் என்று கேட்டு இருக்கணுமா இல்லையா? அவர்கள் மீது ஏன் வழக்கு போடவில்லை, கைது செய்யவில்லை?
20 பேரை சுட்டுப்போட்டு தமிழர்கள் திருட்டுப்பயல்கள் என்றுதானே இந்த உலகத்திற்கு காட்டினீர்கள். கள்ளச்சாராயத்தில் கொழுப்பெடுத்து போய் நீ குடித்து செத்துவிட்டு, நடிக்க வந்தவரை பார்க்க போய் செத்தது, அது எல்லாம் தேவையற்று செத்தது. அதுக்கு நான் காசு தரேன், நீ காசு தரேன் என்று எல்லாரும் வருவது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை என்பது என் நிலத்தை, வளத்தை கெடுக்கிறது. நச்சு ஆலை அதை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம். அது மக்கள் போராட்டம், ஏன் சுட்டுக் கொன்றீர்கள்? அதற்கு யாராவது போய் பார்த்தார்களா? அந்த குடும்பத்திற்கு ஏதேனும் நிதி கொடுத்தார்களா? ஒண்ணும் கிடையாது.
இப்போது இந்த விருத்தாசலத்தில் மின்னல் தாக்கி, இடி விழுந்து வயல் வெளியில் வேலை செய்த 5 பேர் இறந்தனர். அந்த குடும்பத்தை யாராவது போய் பார்த்து ஒரு 10 லட்சம், 15 லட்சம் யாராவது கொடுத்து உதவி செய்வதற்கு இருக்கிறார்களா?
இவ்வாறு சீமான் பேட்டி அளித்தார்.