ADDED : டிச 04, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 288 பாசஞ்சர் ரயில்களின் எண்கள் 2025 ஜன.1 முதல் மாற்றம் செய்யப்படஉள்ளன.
சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் பல்வேறு வழித்தடங்களில் 288 பாசஞ்சர் ரயில்கள் இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலம் முதல் தற்போது வரை இந்த ரயில்கள், ஜீரோ வில் துவங்கும் எண்களுடன் கூடிய சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2025 ஜன.1 முதல் 288 ரயில்களின் எண்கள், ஊரடங்கு காலத்திற்கு முன்பு எந்த எண்ணில் இயங்கியதோ மீண்டும் அதே எண்ணிற்கு மாற்றம் செய்து இயக்கப்பட உள்ளது. ஆனால் கட்டணமோ, நிறுத்துமிடங்களோ ,நேரமோ மாற்றம் செய்யப்படவில்லை.