sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொகுதிகள் எண்ணிக்கை 8 குறையும்: மார்ச்.05ல் ஆலோசனை

/

தொகுதிகள் எண்ணிக்கை 8 குறையும்: மார்ச்.05ல் ஆலோசனை

தொகுதிகள் எண்ணிக்கை 8 குறையும்: மார்ச்.05ல் ஆலோசனை

தொகுதிகள் எண்ணிக்கை 8 குறையும்: மார்ச்.05ல் ஆலோசனை

43


UPDATED : பிப் 26, 2025 10:33 PM

ADDED : பிப் 25, 2025 11:31 PM

Google News

UPDATED : பிப் 26, 2025 10:33 PM ADDED : பிப் 25, 2025 11:31 PM

43


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தொகுதி மறுசீரமைப்பில், தமிழகம் எட்டு லோக்சபா தொகுதிகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுப்பதற்காக, அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

பின், அவர் அளித்த பேட்டி:



அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட் குறித்து பல்வேறு கோரிக்கைகளை, துறை அதிகாரிகள் விரிவாக எடுத்து கூறினர். அடுத்து மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்தோம். தமிழகம் இன்று மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தலைக்கு மேல் கத்தி


எனவே, வரும் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும். தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள, 40 கட்சிகளை அழைக்க முடிவு செய்துள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு விஷயமாக, இக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், தென் மாநிலங்கள் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது, 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு, 2026ம் ஆண்டு, லோக்சபா தொகுதி எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. இது பெரும்பாலும், மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் செய்யப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது, இந்தியாவின் முக்கியமான இலக்கு. இதில் தமிழகம் வெற்றி கண்டுள்ளது.

மக்கள் தொகை குறைவாக இருக்கிற காரணத்தால், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுதும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால், தமிழகத்தில் எட்டு தொகுதிகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதாவது தமிழகத்திற்கு, 31 தொகுதிகள் தான் இருக்கும்.

மற்றொரு புறம் கணக்கிட்டுப் பார்த்தால், ஒட்டு மொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கையை உயர்த்தி பிரித்தாலும், நமக்கு இழப்புதான் ஏற்படும்; நமக்கான பிரதிநிதித்துவம் குறையும்.

அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால், தமிழகத்தின் குரல் நசுக்கப்படுகிறது. இது நமது மாநிலத்தின் உரிமை சார்ந்தது.

நிதி பிரச்னை




தமிழகம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளில், அனைத்து அரசியல் கட்சிகள், தலைவர்கள் ஒன்றிணைந்து, முதற் கட்டமாக, இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். அனைத்து கட்சிகளும் அரசியலைக் கடந்து, இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும்.

மும்மொழிக் கொள்கை, 'நீட்' தேர்வு பிரச்னை, மாநிலத்திற்கு தர வேண்டிய நிதிப் பிரச்னை ஆகியவற்றுக்கு தீர்வு காண, அதிக எம்.பி.,க்கள் வேண்டும்; அப்போதுதான் குரல் கொடுக்க முடியும்.

பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்களுக்கு, பதில் எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் ஒரு மொழிப் போருக்கு, மத்திய அரசு வித்திடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்

ஒன்றாக கைகோர்க்க வேண்டிய காலமிது


கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு கடிதம்அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக, அரசியல் கட்சி தலைவர்களுக்கு, முதல்வர் அனுப்பியுள்ள கடிதம்:அடுத்த ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை, மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ளது. இந்த சூழலில், தமிழகம் சந்திக்கக் கூடிய இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு, உங்கள் ஆதரவை கோருகிறேன். தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பை, இரண்டு விதமான முறைகள் வழியாக செய்ய திட்டமிட்டு வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.முதல் முறையின் கீழ், ஏற்கனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையின்படி, தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில், மறுசீரமைப்பு செய்தால், தமிழகம் எட்டு தொகுதிகளை இழக்க வேண்டி இருக்கும். இரண்டாவது முறையின்படி, மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை, 848 ஆக உயர்த்தி, தற்போதைய மக்கள தொகை அடிப்படையில், மறுசீரமைப்பு செய்தால், நமக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய, 22 தொகுதிகளுக்கு பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.

இதனால், 12 தொகுதிகளை, நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எவ்வகையில் பார்த்தாலும், தமிழகத்திற்கு பேரிழப்பு ஏற்படும் வாய்ப்பே நம் முன் நிற்கிறது. தற்போதைய லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூட, பல்வேறு நியாயமான கோரிக்கைகளை, தமிழகம் பெற இயலவில்லை. மத்திய அரசின் அதிகார குவிப்பு, மத்திய அரசு சார்ந்த திட்டங்களில், நிதி குறைக்கப்படுவது, மத்திய அரசு அதிகாரத்தில், நமது பிரதிநிதித்துவம் குறைந்து வருவது, நிதிப் பகிர்வில் பாரபட்சம் என, அனைத்து வகைகளிலும், தமிழகத்தின் உரிமைகளும், சுயாட்சியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், தமிழகத்தின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும். எனவே, லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு முறையானது, நமது மாநிலத்தை பாதிக்காத வகையில் செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது இந்த முயற்சி, நமது கூட்டாட்சி கட்டமைப்பை, முழுமையாக சிதைப்பதற்கு முன்பாக தடுத்து நிறுத்த வேண்டும்.இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க, நமக்கு குறைந்த கால அவகாசமே உள்ளது.

எனவே, நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய காலமிது. இந்த கூட்டு முயற்சிக்கு, உங்கள் ஒத்துழைப்பு தேவை. நாம் அனைவரும் ஒன்றாக கலந்தாலோசித்து, நமது மாநிலத்தின் நலன் காப்பதற்கான, ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில், தகுந்த உத்திகளை தீட்டி செயல்படுத்த, தங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.மார்ச் 5ம் தேதி காலை 10:00 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us