ADDED : ஆக 14, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், கண்டு பிடிக்க முடியாத குற்றங்களின் எண்ணிக்கை, 11,790ல் இருந்து, 8,191 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை, ஆதாய கொலை, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி, திருட்டு மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்தல் என, பல்வேறு வகையாக பிரித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்கின்றனர்.
இத்தகைய குற்றங்கள், காவல் துறையினரின் பதிவேடுகளில், முதன்மையான இடத்தில் உள்ளன. இத்தகைய குற்ற வழக்குகளில், கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
கடந்த 2022ல், கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் எண்ணிக்கை, 11,790 ஆக இருந்தது.
இது 2023ல் 9,853 ஆகவும், 2024ல் 8,191 ஆகவும் குறைந்துள்ளது.

