
30,000
ந வி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை அமைக்க, 30,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டு உள்ளது.
இது தொடர்பாக இந்திய, ஜப்பானிய வங்கிகள் மற்றும் சிங்கப்பூர் அரசின் முதலீட்டு நிறுவனமான டெமாசெக் உடன் அதானி குழுமம் ஆலோசித்து வருகிறது.
பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்த நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையம், வரும் டிசம்பரில் செயல்பாட்டு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
15,329
நா ட்டில் மின்சார கார்கள் விற்பனை, கடந்த செப்டம்பரில் இரு மடங்குக்கு மேல் அதிகரித்து, 15,329 ஆக பதிவாகி உள்ளது. 2024 செப்டம்பரில் 6,191 மின்சார கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இரண்டரை மடங்காக அதிகரித்து உள்ளன.
இதில், 6,216 கார்கள் விற்பனையுடன் டாடா மோட்டார்ஸ் முன்னணியில் உள்ளது. ஜே.எஸ்.டபிள்யு., எம்.ஜி., 3,912 கார்களையும், மஹிந்திரா அண்டு மஹிந்திரா 3,243 கார்களையும் விற்பனை செய்துள்ளன.
இந்தியாவில் அறிமுகமான ஒன்றரை மாதங்களில், அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் 64 கார்களை விற்பனை செய்து உள்ளது.