சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ADDED : பிப் 03, 2026 05:40 AM

- நமது நிருபர் -
சத்துணவு ஊழியர்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
சத்துணவுத்துறையில் அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள் என, 80,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இத்துறையில், பல ஆண்டுகளாக, 40 சதவீத காலிப்பணியிடங்கள் உள்ளதால், பணிச்சுமையுடன் பணியாற்றுகின்றனர்.
தங்களையும் அரசு ஊழியராக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோரிக்கைகள் பல வற்றை, அரசு இன்னமும் கண்டுகொள்ளவில்லை எனக்கூறி, இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துகின்றனர். மாவட்ட தலைநகரங்களில், தினமும் மறியல் நடத்தவும் ஏற்பாடு நடக்கிறது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், ஐ.சி.டி.எஸ்., மற்றும் உதவியாளர்கள் சங்கம், தமிழ் மாநில அங்கன்வாடி உதவியாளர்கள் சங்கம், ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் உட்பட, ஆறு சங்கங்களின் கூட்டமைப்புகள் நேரடியாக இன்று களமிறங்குகின்றன.
இதனால், நாடு முழுதும் சத்துணவு, அங்கன்வாடி பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின், அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், பணி நிரந் தரம், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள், நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்து, திருமங்கலத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்து, மாலை விடுவித்தனர்.
