சடலம் கிடந்த கிணற்றின் நீர் வினியோகத்திற்கு எதிர்ப்பு
சடலம் கிடந்த கிணற்றின் நீர் வினியோகத்திற்கு எதிர்ப்பு
ADDED : ஜன 09, 2024 02:47 AM
திருச்சி: திருச்சி மாவட்டம், இனாம்குளத்துாரைச் சேர்ந்த மக்களுக்கு, இங்குள்ள பெரிய ஏரியின் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இப்பகுதியை சேர்ந்த சங்கப்பிள்ளை, 80, என்பவர், 3ம் தேதி, பெரிய ஏரியில் உள்ள கிணற்றில் விழுந்து இறந்து விட்டார். அந்த கிணற்றை சுத்தம் செய்யாமல், பஞ்., நிர்வாகம் கிணற்றில் இருந்தே தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்கிறது.
இதை கண்டித்து நேற்று காலை, இனாம்குளத்துார் கடை வீதியில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின், செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த இனாம்குளத்துார் போலீசார், மறியல் செய்தவர்களுடன் பேச்சு நடத்தினர். அப்போது, கிணற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. பின், மறியலுக்கு வந்தவர்கள் கலைந்து சென்றனர்.