ADDED : ஏப் 03, 2024 12:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நீர்வளத்துறையில், செயலருக்கு அடுத்து முதன்மை தலைமை பொறியாளர் பதவி
முக்கியமானது. அதிகாரிகள், அலுவலர்கள் பதவி உயர்வு, பணியிடமாற்றம், புதிய திட்டங்கள் செயலாக்கம் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள், இப்பதவி வகிப்போருக்கு உள்ளன.
முதன்மை தலைமை பொறியாளராக இருந்த முத்தையா, கடந்த 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இப்பதவியை கைப்பற்றுவதற்கு அதிகாரிகள் மத்தியில் பலத்த போட்டி ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளராக உள்ள அசோகன், இப்பதவிக்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, நிரந்தர அதிகாரி நியமிக்கப்படவில்லை. இதேபோல, ஒப்பந்ததாரர் பதிவு மற்றும் புதுப்பிப்பு பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

