தேர்தல் தேதி அறிவிப்பு சனிக்கிழமையிலும் அலுவலகங்கள் 'பிஸி'
தேர்தல் தேதி அறிவிப்பு சனிக்கிழமையிலும் அலுவலகங்கள் 'பிஸி'
ADDED : மார் 17, 2024 04:26 AM
சென்னை : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்கள் விடுமுறை நாளான நேற்றும்இயங்கின.
சென்னை சேப்பாக்கம்எழிலகம் வளாகத்தில் போக்குவரத்து, வேளாண்மை, தோட்டக்கலை, பொதுப்பணி, வருவாய், தமிழக குடிநீர் வடிகால் வாரியம், கனிமவளம், நில நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளாகும். இவ்விரு நாட்களும், எழிலக வளாகம் வெறிச்சோடி கிடக்கும்.
முக்கிய பணிகள் காரணமாக ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மட்டும், அங்கு வந்து செல்வர். விடுமுறை நாளான நேற்று பல அலுவலகங்கள் திறந்திருந்தன.
லோக்சபா தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்ட நிலையில், நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்னதாக, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தேர்தல் அறிவிப்புக்கு பின், அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

