ADDED : நவ 24, 2025 12:28 AM
தமிழகத்தில் நடந்து வரும், 'எஸ்.ஐ.ஆர்.,' எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து, தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் இன்று கள ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவை சேர்ந்த துணை இயக்குனர்கள் பவன், தேவன்ஷ் திவாரி ஆகியோர், இன்று முதல், 26ம் தேதி வரை, எஸ்.ஐ.ஆர்., பணி தொடர்பான, ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்ய உள்ளனர். அதைத் தொடர்ந்து, சென்னையில் கள ஆய்வும் செய்கின்றனர்.
மாவட்ட அளவில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வாயிலாக, கணக்கெடுப்பு படிவங்கள் வினியோகம் மற்றும் டிஜிட்டல் பதிவேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் ஆணைய இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, செல்ல உள்ளார். தேர்தல் ஆணையத்தின் செயலர் மதுசூததன் குப்தா, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சென்று, எஸ்.ஐ.ஆர்., பணியை ஆய்வு செய்ய உள்ளார்.

