தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ குறித்த காலத்தில் வாரிசு சான்று வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு

குறித்த காலத்தில் வாரிசு சான்று வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு

குறித்த காலத்தில் வாரிசு சான்று வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு


ADDED : ஆக 22, 2025 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2025 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பதாரர் களுக்கு, வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்படுவதை, கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்' என, வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார் உத்தரவிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில், 2015 முதல் ஜாதி சான்றிதழ், வாரிசுரிமை சான்றிதழ் உள்ளிட்ட, 26 வகையான ஆவணங்கள், 'ஆன்லைன்' முறையில் வழங்கப்படுகின்றன. இந்த சான்றிதழ்கள் குறித்த காலத்தில் கிடைப்பதில்லை என்றும், மனுக்கள், விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுகின்றன என்றும், தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

ஜாதி சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்கள், பட்டா போன்ற ஆவணங்கள், கொடிநாள் நிதி என்ற பெயரில், குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே கிடைப்பதாக புகார்கள் வருகின்றன. இந்த போக்கை நிறுத்த, மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, வாரிசு சான்றிதழ் கிடைத்தால் தான், அதன் அடிப்படையில் பட்டா, வங்கி ஆவணங்கள், பத்திரப்பதிவு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய முடியும். இது தொடர்பான பணிகளில் பொது மக்களிடம் புகார்கள் வருகின்றன.

எனவே, வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் குறித்த காலத்தில் வழங்கப்படுவதை, கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த அறிவுறுத்தல்கள் மீறப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில், தாசில்தார்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us