தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கிரானைட் கழிவுகளை விற்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

 கிரானைட் கழிவுகளை விற்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

 கிரானைட் கழிவுகளை விற்க முடியாமல் அதிகாரிகள் திணறல்


ADDED : மே 11, 2026 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில் குவாரிகளில் இருந்து எடுக்கப்பட்ட, கிரானைட் கழிவுகளை விற்க முடியாமல், அதிகாரிகள் திணறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், தர்மபுரி, அரியலுார் உட்பட, 10க்கும் மேற் பட்ட மாவட்டங்களில், கிரானைட் குவாரிகள் செயல்படுகின்றன.

கடந்த, 2006 - 11ல் தி.மு.க., ஆட்சி காலத்தில், கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது, வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன.

மதுரை மேலுார் உட்பட பல்வேறு இடங்களில், அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதாக, அப்போது புகார் எழுந்தது.

வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதால், கிரானைட் குவாரிகள் விஷயத்தில், கனிமவளத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், கிரானைட் விற்பனையை, 'டாமின்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பொறுப்பில் உள்ள குவாரிகளில், தனியார் வாயிலாக, கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவ்வாறு கிரானைட் வெட்டி எடுக்கும் போது, சிறு துண்டுகளாக கிடைக்கும் கிரானைட்கள், கழிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

இந்த கிரானைட் கழிவுகள், 'டெண்டர்' விடப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், அரியலுார், தர்மபுரி, வேலுார், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கிரானைட் கழிவுகளை விற்க, 'டாமின்' நிறுவனம் முடிவு செய்தது.

கடந்த ஆண்டு இறுதியில், இதற்கான 'டெண்டர்' அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், ஒப்பந்ததாரர்கள் யாரும் பங்கேற்க முன் வராததால், 'டெண்டர்கள்' பாதியில் முடங்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து, கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரியலுார், தர்மபுரி உட்பட ஐந்து மாவட்டங்களில், கிரானைட் கழிவுகள் விற்க, கடந்த ஆண்டு, அக்., 7; நவம்பர் , 12 என மொத்தம், 19 'டெண்டர்' அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதில், பங்கேற்க ஒப்பந்ததாரர்கள் வரவில்லை. இதனால், இந்த டெண்டர்களில் விண்ணப்பிப்பதற்கான, கால வரம்பை மட்டும், மாதந்தோறும் நீட்டித்து வருகிறோம். கடந்த ஆறு மாதமாக, இதில் யாரும் பங்கேற்காதது ஏன் என விசாரித்து வருகிறோம்.

ஒப்பந்ததாரர்கள் தரப்பு கருத்துகளை கேட்ட பின், அரசின் வழிகாட்டுதல் பெற்று, இதில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us