UPDATED : பிப் 04, 2025 11:24 PM
ADDED : பிப் 04, 2025 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பழைய ஒய்வூதிய திட்டத்தை விரிவாக ஆய்வு செய்திட மூன்று பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், பழைய ஒய்வூதிய திட்டம், பங்களிப்பு ஒய்வூதியம் உள்ளிட்ட 3 ஓய்வூதிய திட்டஙகளை குறித்து விரிவாக ஆய்வு செய்திட கூடுதல் தலைமை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் கே.ஆர்.. சண்முகம், நிதித்துறை கூடுதல் உறுப்பினர் செயலர் பிரத்திக் தயாள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இக்குழு பழைய ஒய்வூதிட்டம் குறித்து பரிந்துரைகளை விரிவான அறிக்கையாக 9 மாதத்திற்குள் அரசுக்கு சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

