கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ் : ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி
கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ் : ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி
UPDATED : பிப் 09, 2024 10:07 PM
ADDED : பிப் 09, 2024 09:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கோயம்பேடு சுற்றி உள்ள ஆம்னி பஸ் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்.மறு உத்தரவு வரும் வரையில் நடைமுறையை தொடரலாம் என சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.
ஐகோர்ட் பிறப்பித்து உள்ள உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது: கோயம்பேடு சுற்றி உள்ள ஆம்னி பஸ் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றலாம் .ஆன்லைன் மொபைல் ஆப்களில் போரூர் சூரப்பட்டு தவிர வேறு இடங்களை குறிப்பிடக்கூடாது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்களை இயக்க கூடாது.மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பஸ்களின் பணிமனைகளை பயன்படுத்தலாம் இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

