மார்ச் 26ல் திருவோடு ஏந்தி கடலில் மீனவர்கள் போராட்டம்
மார்ச் 26ல் திருவோடு ஏந்தி கடலில் மீனவர்கள் போராட்டம்
ADDED : மார் 19, 2024 06:35 AM
ராமேஸ்வரம் : இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி மார்ச் 26ல் ராமேஸ்வரம் கடலில் இறங்கி மீனவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்த உள்ளனர்.
நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சங்க தலைவர் சேசு தலைமையில் கூட்டம் நடந்தது.
இதில், மார்ச் 16ல் ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை அரசுக்கு கண்டனம்; அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நாள்களாக தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படை வீரர்கள், கடுமையாக தாக்கி சிறையில் அடைப்பது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து மத்திய அரசு இலங்கையை கண்டிக்க வேண்டும்.
தற்போது இலங்கை சிறையில் உள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்காலை சேர்ந்த 63 மீனவர்கள், 160 படகுகளை விடுவிக்க வேண்டும். இதனை வலியுறுத்தியும் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் மார்ச் 26ல் ராமேஸ்வரம் கடலில் இறங்கி திருவோடு ஏந்தி போராட்டம் நடக்கும்.
ஒரு வாரத்தில் இரு நாட்கள், அதுவும் மதியம் 3:00 மணிக்கு மீன்பிடிக்க செல்வது என முடிவு செய்த நிலையில், மார்ச் 16ல் இரு படகின் மீனவர்கள் மதியம் 2:00 மணிக்கு மீன்பிடிக்க சென்ற போது, சக மீனவர்கள் கேட்டதற்கு படகின் டிரைவர்கள் அதரின், சிங்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். அவர்கள் மீதும், விசைப்படகுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானத்தில் தெரிவித்தனர். கூட்டத்தில் மீனவ சங்க தலைவர்கள் சகாயம், எமிரேட் பங்கேற்றனர்

