
டிசம்பர் 4, 1910
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள ராஜாமடம் கிராமத்தில், ராமசாமி அய்யர்- ராஜம் தம்பதியின் மகனாக, 1910ல் இதே நாளில் பிறந்தவர் ஆர்.வெங்கட்ராமன்.
இவர், பட்டுக்கோட்டை பள்ளி, சென்னை பல்கலை மற்றும் சட்ட கல்லுாரிகளில் படித்தார். சுதந்திர போராட்டத்தில்ஈடுபட்டு சிறை சென்றார். சென்னை உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்.
இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு உறுப்பினராகவும், தொழிலாளர் சட்ட நிபுணராகவும்இருந்த இவர், பல தொழிற்சங்கங்களின் தலைவராகவும் இருந்தார். சுதந்திரத்துக்கு பின், மத்திய பாதுகாப்பு, நிதி அமைச்சராக இருந்தார். காமராஜர் அழைத்ததால், மாநில அரசியலுக்கு திரும்பி தொழிலாளர் நலன், மின்சாரம், தொழில், போக்குவரத்து, வணிகவரி துறை அமைச்சராகவும்இருந்தார்.
கடந்த 1984ல் துணை ஜனாதிபதியாகவும், 1987ல் ஜனாதிபதியாகவும் தேர்வான இவர், 2009 ஜனவரி 27ல் தன் 98வது வயதில் மறைந்தார்.
நாட்டில், நான்கு பிரதமர்களுக்கு ஜனாதிபதியாக இருந்த, ஆர்.வி., பிறந்த தினம் இன்று!