
டிசம்பர் 22, 1914
கோவை, செட்டிபாளையத்தில்,கல்யாணசுந்தரம் கவுண்டர் - வேலம்மாள் தம்பதியின் மகனாக,1914ல் இதே நாளில் பிறந்தவர் ராமசாமி. இவர், கோவையில் படித்து, தன் குடும்பத்தின் ஆட்டோ மொபைல் தொழிலில் ஈடுபட்டார்.
தன் மனைவியின் திடீர் இறப்பால், நாட்டில் உள்ள பல சிவன் கோவில்களில் தங்கி தியானம் செய்தார். ராமகிருஷ்ண தபோவனத்தில்தீட்சை பெற்று, சாம்பசிவ சைதன்யா என பெயரிடப்பட்டார். ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து, ரமணரிடம் சேர்த்தார்.
ரமணரின் கை புற்றுநோய் மற்றும் சிகிச்சை முறையை தாங்க முடியாமல் வெளியேறினார். இமயமலை பகுதிகளில் சுற்றி, ரிஷிகேஷில் சிவானந்தசரஸ்வதியை சந்தித்தார். அவருடன் ஆன்மிகபணியில் ஈடுபட்டு, சச்சிதானந்த சரஸ்வதி ஆனார்.
இலங்கை, திரிகோணமலை தபோவனத்துக்கு தலைமை ஏற்றார். நண்பர்களின் உதவியால் அமெரிக்கா சென்று, யோகா மையம் அமைத்தார்.ஒருங்கிணைந்த யோகா முறையை அறிமுகப்படுத்தி மன அழுத்தம், குடும்ப பிரச்னைகளில் இருந்து பலரை விடுவித்தார். இதனால், பல நாடுகளின் விருதுகளை பெற்றார். தன் 87வது வயதில், 2002 ஆகஸ்ட் 19ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!