sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : பிப் 26, 2024 09:11 PM

Google News

ADDED : பிப் 26, 2024 09:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்ரவரி 27, 1932

சென்னை மாகாண முன்னாள் முதல்வரும், நீதிக்கட்சி நிறுவனருமான பி.டி.ராஜன் - கற்பகாம்பாள் தம்பதியின் மகனாக, 1932ல் இதே நாளில், மதுரையில் பிறந்தவர், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன்.

இவர், இலங்கையின் கண்டியில் உள்ள டிரினிட்டி பள்ளி, குன்னுார் சூசையப்பர் பள்ளி, சேலம் மான்போர்டு பள்ளி, சென்னை கிறிஸ்துவ கல்லுாரி, சென்னை சட்டக் கல்லுாரியில் படித்தார். மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

தி.மு.க., சார்பில், 1967ல் தேனி தொகுதி எம்.எல்.ஏ.,வானார். கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவர், லண்டன் காமன்வெல்த் மாநாட்டு தலைவர் பொறுப்புகளை வகித்தார். இரண்டு முறை, எம்.எல்.சி.,யாக இருந்தார்.

கடந்த, 1996ல் மதுரை மத்திய தொகுதிஎம்.எல்.ஏ.,வாகி, தி.மு.க., அரசில் சபாநாயகரானார். 2006ல் மீண்டும் வென்று ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சரானார். பதவியேற்ற ஒரு வாரத்தில், மதுரைக்கு ரயிலில் பயணித்தார். அதிகாலையில் திண்டுக்கல் அருகே ரயில் சென்றபோது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மே 20ல், தன் 74வது வயதில் காலமானார்.

தமிழக அமைச்சர் தியாகராஜனின் தந்தையான, பி.டி.ஆர்., பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us