
மார்ச் 5, 1958
செங்கல்பட்டு மாவட்டம், மேல்பாக்கத்தில், மெகமுது பாஷா - மும்தாஜ் பேகம் தம்பதியின் மகனாக, 1958ல் இதே நாளில் பிறந்தவர் நாசர் முகமது.
சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் பி.எஸ்.சி., படித்து, இந்திய விமானப் படையில் பணியாற்றினார். பத்திரிகைகளில் கதை, கவிதை எழுதினார். சென்னை திரைப்படக் கல்லுாரியில் நடிப்புத் துறையில் பட்டய சான்றிதழ் பெற்றார்.
கே.பாலசந்தரின், கல்யாண அகதிகள் திரைப்படத்தில் அறிமுகமானார். நாயகன், ரோஜா, மகளிர் மட்டும், தேவர் மகன், அவ்வை சண்முகி, ஜீன்ஸ் உள்ளிட்ட படங்களில், காமெடி, வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழடைந்தார்.
அவதாரம், தேவதை, மாயன், பாப்கார்ன் ஆகிய படங்களை இயக்கினார். தமிழக அரசின் 'கலைமாமணி' விருதுடன், சண்டி என்ற தெலுங்கு படத்திற்காக, சிறந்த வில்லன் நடிகர் என்ற விருதையும் ஆந்திர அரசிடம் பெற்றார்.
தற்போது, தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார். எந்த பாத்திரம் கொடுத்தாலும், அதில் தனி முத்திரை பதிக்கும் நாசரின் 66வது பிறந்த தினம் இன்று!

