
செப்டம்பர் 22, 1930
ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில், பனிந்திர சுவாமி - கிரியாம்மா தம்பதியின் மகனாக, 1930, செப்டம்பர் 22ல் பிறந்தவர், பிரடிவாடி பயன்காராஸ்ரீனிவாஸ் எனும் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
இசை ஞானம் உள்ள தாயிடம் இருந்து இவருக்கும் ஆர்வம் வந்தது.தந்தை, இவரை வழக்கறிஞராக்க தீர்மானித்து, இவர் பி.காம்., முடித்ததும் சென்னை சட்டக் கல்லுாரியில் சேர்த்தார். இவரோ கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசையை கற்றார்.மிஸ்டர் சம்பத் என்ற படத்தில் பின்னணிபாடகராக அறிமுகமானார். ஆங்கிலம், உருது, தமிழ் உள்ளிட்ட எட்டு மொழிகளில், கவிதை எழுதும் அளவுக்கு புலமை பெற்றார்.
அனைத்துமொழிகளிலும் அட்சரம் பிசகாமல் பாடினார்.இவரது, 'இன்பம் பொங்கும் வெண்ணிலா, நினைத்ததெல்லாம் நடந்து விட்டால், மயக்கமா கலக்கமா, ரோஜா மலரே ராஜகுமாரி, காலங்களில் அவள் வசந்தம், தாமரை கன்னங்கள், கண்ணாலே பேசிப்பேசி கொல்லாதே, பால் வண்ணம் பருவம் கண்டேன்' உள்ளிட்ட பாடல்கள் இப்போதும் மயக்கும்.
ஜெமினி கணேசன், கன்னட நடிகர் ராஜ்குமாரின் குரலாகவே ஒலித்த இவர், 2013, ஏப்., 14ல் தன், 82வது வயதில் மறைந்தார். 'மெல்லிசை குரலோன்' பி.பி.எஸ்., பிறந்த தினம் இன்று!