sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : ஏப் 13, 2025 12:33 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்ரல் 13, 1913

திருநெல்வேலி மாவட்டம், மேலநத்தம் கிராமத்தில், ராமச்சந்திர அய்யர் -- ருக்மணி அம்மாள் தம்பதிக்கு மகனாக, 1913ல் இதே நாளில் பிறந்தவர் எம்.ஆர்.எம்.சுந்தரம்.

பாளையங்கோட்டை சேவியர் கல்லுாரியில் இளங்கலை பட்டம் பெற்று, மாதம் 13 ரூபாய் சம்பளத்தில் கிராம முன்சீப் பணியில் சேர்ந்தார். புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் மிக்க இவர், கலைமகள் இதழ் நடத்திய கவிதை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார்.

இவரது திறமையை கண்ட ரசிகமணி டி.கே.சி., இவருக்கு திருச்சி வானொலி நிலையத்தில் பணியில் சேர பரிந்துரை கடிதம் கொடுத்தார். பின், டில்லி அகில இந்திய வானொலிக்கு சென்றார்.

அங்கு, தமிழ் செய்தி பிரிவுக்கு தலைவராகி, செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார். அப்போது, 'அடிக்கல் நாட்டுதல், குழந்தைகள் காப்பகம்' உள்ளிட்ட புதிய தமிழ் சொற்களை அறிமுகப்படுத்தினார்.

குடும்ப கட்டுப்பாடு பிரசாரத்துக்காக இவர் உருவாக்கிய, 'நாம் இருவர் நமக்கு இருவர்; அதிகம் பெறாதீர், அவதியுறாதீர்' உள்ளிட்ட வாசகங்கள் பிரபலம். பணி ஓய்வுக்கு பின், கல்கி இதழில், அதன் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை, 'பொன்னியின் புதல்வர்' என்ற தலைப்பில், நான்காண்டுகள் தொடராக எழுதியவர், தன் 82வது வயதில், 1995 நவம்பர் 11ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us