ADDED : ஆக 31, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இன்று (ஆக., 31) இயக்கப்படுகிறது.
மதியம் 12:45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு நாளை காலை 7:15 மணிக்கு கொச்சுவேலி செல்கிறது. இந்த ரயில், அரக்கோணம், காட்பாடி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலுார், கொல்லம் வழியாக இயக்கப்படுகிறது.
ரயில்வே நிர்வாகத்தின் இதுபோன்ற கடைசி நேர அறிவிப்பால் முழுதும் முன்பதிவு செய்யப்பட்ட இந்த ரயில் பயணிகளுக்கு பயன்படாமல் காலிப் பெட்டிகளுடன் இயக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

