ADDED : ஏப் 07, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த காங்கேயநல்லுாரில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்திற்கான அடிக்கல் நாட்டு பணியை, அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார்.
கருணாநிதி சுய சரிதையில், ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்தார்.
ஆனால், ஸ்டாலின் அவர் வழியில் நடக்கவில்லை என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ''இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான பேச்சு. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எப்போதும் வராது.
''ஒரே நாடு ஒரே மொழி, ஒரே சாப்பாடு, ஒரே சாமியார் என்பது போல் தான் இது,'' என்று கூறினார்.

