உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 15, 2026 01:36 AM
அ நிறம் | அளவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் போது, வெடித்ததில், அங்கு பணி செய்த காவலாளி மனோகரன், 55 என்பவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டையில், ஆம்புலன்ஸ்களுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொரு சிலிண்டருக்கு காஸ் ரீபில் செய்யும் பணியில் நேற்று இரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், அங்கு பணிபுரிந்த மேட்டுப்பட்டியை சேர்ந்த காவலாளி மனோகரன் படுகாயத்துடன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சிலிண்டர் வாங்கி செல்வதற்காக வந்திருந்த பூபதி என்பவர் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து, புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
