கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை: அண்ணாமலை புகார்
கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை: அண்ணாமலை புகார்
ADDED : ஏப் 19, 2024 05:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ‛‛ கோவை லோக்சபா தொகுதியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை கூறியதாவது: கோவை லோக்சபா தொகுதியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை தேர்தல் மேலிட பார்வையாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் இடம் பாஜ சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஒரு லட்சம் ஓட்டுகளுக்கு யார் பதில் சொல்லுவார். இது அரசியல் ரீதியாக திமுகவினர் செய்துள்ள சதி. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

