sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு பெருமாள்- 04

/

தினமும் ஒரு பெருமாள்- 04

தினமும் ஒரு பெருமாள்- 04

தினமும் ஒரு பெருமாள்- 04


ADDED : டிச 18, 2024 06:43 PM

Google News

ADDED : டிச 18, 2024 06:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறை தீர...@

@

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் கூழமந்தலில் கோயில் கொண்டிருக்கும் பேசும் பெருமாளை தரிசித்தால் குறையனைத்தும் தீரும். பல ஆண்டுக்கு முன்பு 12 அடி உயர மகாவிஷ்ணுவின் சிலை பூமியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு கூழமந்தலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் நின்ற கோலத்தில் கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி ஸ்ரீதேவி, பூதேவியுடன் இருக்கிறார்.

பக்தரை நோக்கி கருணையுடன் பேசுவது போல இருப்பதால் 'பேசும் பெருமாள்' எனப் பெயர் பெற்றார். தாயார்கள் இருவரின் வலது கைகளிலும் தாமரை மலர் இருப்பது சிறப்பு. ஆந்திர மாநிலம் நெல்லுார் பகுதியை ஆட்சி செய்த விஜயகண்ட கோபாலன் இங்கு விளக்கு எரிய தானம் அளித்துள்ளார். தமிழ்ப்புத்தாண்டு, வைகாசி விசாகம் கருடசேவை, புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் சிறப்பான விழாக்கள். சனிக்கிழமை தோறும் திருமஞ்சனம் விசேஷமாக நடக்கிறது.

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் 18 கி.மீ.,

நேரம்: காலை 8:00 - 12:00 மணி மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 76399 41369

அருகிலுள்ள தலம்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள்

நேரம்: காலை 6:00 - 12:30 மணி மதியம் 3:30 - 8:30 மணி

தொடர்புக்கு: 044 - 2726 9773






      Dinamalar
      Follow us