sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு பெருமாள்- 21

/

தினமும் ஒரு பெருமாள்- 21

தினமும் ஒரு பெருமாள்- 21

தினமும் ஒரு பெருமாள்- 21


ADDED : ஜன 04, 2025 08:03 PM

Google News

ADDED : ஜன 04, 2025 08:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகாக மாற...


துாத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வகுளகிரி மலையில் உள்ள வெங்கடாஜலபதியை வணங்கினால் அழகாக மாறலாம். முன்பு வடஇந்தியாவில் சுபகண்டன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு கண்டமாலை என்ற நோய் வந்ததால், கழுத்தில் கட்டி ஏற்பட்டது. அவதிப்பட்ட அவர் திருப்பதிக்கு சென்று பெருமாளை வழிபட்டார். அவரது கனவில் தோன்றிய பெருமாள், 'சுபகண்டா. சந்தனக் கட்டை கொண்டு எனக்கு ஒரு தேர் செய். அதில் மீதம் இருக்கும் கட்டையை தாமிரபரணி கரையில் உள்ள வகுளகிரியில் பிரதிஷ்டை செய். நோய் தீரும்' என்றார்.

அதன்படி இங்கு வந்து பிரதிஷ்டை செய்து நோய் நீங்கப்பெற்றார் மன்னர். அதிலும் முன்பு இருந்ததை விட அழகாக மாறி நாடு திரும்பினார். இதன் மூலம் இங்கு நோய் தீர்க்கும் வைத்தியராக காட்சி தருகிறார் வெங்கடாஜலபதி பெருமாள். ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார் உற்ஸவர் சீனிவாசர். மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதுபோல், இங்கு சீனிவாசர் தாமிரபரணியில் இறங்கி அருள் செய்கிறார்.

திருநெல்வேலியில் இருந்து 15 கி.மீ.,

நேரம்: காலை 8:00 - 10:30 மணி மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 99420 51512

அருகிலுள்ள தலம்: ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் 10 கி.மீ.,

நேரம்: காலை 7:00 - 12:00 மணி மாலை 5:00 - 8:30 மணி






      Dinamalar
      Follow us