sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு பெருமாள் -01 : கடன் பிரச்னைக்கு...

/

தினமும் ஒரு பெருமாள் -01 : கடன் பிரச்னைக்கு...

தினமும் ஒரு பெருமாள் -01 : கடன் பிரச்னைக்கு...

தினமும் ஒரு பெருமாள் -01 : கடன் பிரச்னைக்கு...


ADDED : டிச 15, 2024 06:58 PM

Google News

ADDED : டிச 15, 2024 06:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமும் ஒரு பெருமாள் -01

கடன் பிரச்னைக்கு...

மாதங்களில் நான் மார்கழி என்றார் பகவான் கிருஷ்ணர். சிறப்பான இந்த மாதத்தில் திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாளை தரிசித்தால் கடன் பிரச்னை தீரும். வியாச மகரிஷியின் சீடரான பைலர் தாமிரபரணி நதிக்கரையில் தங்கியிருந்தார். இவர் தன் மனதிற்குள் தினமும் பெருமாளுக்கு கோடி மலர்களால் அர்ச்சனை செய்தார். ஒருமுறை பைலருக்கு நீலரத்தின மேனியனாக பெருமாள் இங்கு காட்சியளித்தார். இதனடிப்படையில் இக்கோயில் கட்டப்பட்டது.

கருவறையில் கரியமாணிக்க பெருமாளை நின்ற கோலத்திலும், அனந்த பத்மநாப சுவாமியைக் கிடந்த கோலத்திலும், லட்சுமி நாராயணரை அமர்ந்த கோலத்திலும் இக்கோயிலில் தரிசிக்கலாம். தை மாதம் திருவோணத்தன்று நடக்கும் கருடசேவை சிறப்பானது. ரத சப்தமியன்று திருப்பதியை போல காலை முதல் இரவு வரை ஏழு வாகனங்களில் உலா நடக்கும்.

கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை கருட சேவை, வைகுண்ட ஏகாதசி, பங்குனி பிரம்மோற்ஸவம் முக்கியமானவை. திருநெல்வேலி டவுனில் கோயில் உள்ளது.

நேரம்: காலை 7:30 - 10:30 மணி மாலை 5:30 - 8:30 மணி

தொடர்புக்கு: 99944 29488, 98421 -64100

அருகிலுள்ள தலம்: நெல்லையப்பர் கோயில்

நேரம்: அதிகாலை 5:30 - 12:30 மணி மாலை 4:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 0462 - 233 9910






      Dinamalar
      Follow us