sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு பெருமாள்-13 : கவலை இனியில்லை

/

தினமும் ஒரு பெருமாள்-13 : கவலை இனியில்லை

தினமும் ஒரு பெருமாள்-13 : கவலை இனியில்லை

தினமும் ஒரு பெருமாள்-13 : கவலை இனியில்லை


ADDED : டிச 27, 2024 06:51 PM

Google News

ADDED : டிச 27, 2024 06:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவலை இனியில்லை


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளது கண்டனுார். இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளின் பார்வை நம்மீது விழுந்தாலே போதும். கவலை யாவும் தீர்ந்துவிடும். இப்பகுதியை சேர்ந்த ஒருவர் திருப்பதி பெருமாள் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். ஒருநாள் இவரது கனவில் தோன்றிய பெருமாள், தனக்கு இங்கு ஒரு கோயில் கட்டுமாறு கட்டளையிட்டார். அதன்படி உருவானதுதான் இக்கோயில்.

இதை பெரிய பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர். ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி சங்கு, சக்கரத்துடன் அருள்கிறார் ஸ்ரீநிவாசப்பெருமாள். இவரது கடைக்கண் பார்வை நம்மீது விழுந்தால் போதும். தீராத பிரச்னைகள் தீர்ந்துவிடும். அலர்மேல்மங்கை தாயார், ஆண்டாள், அனுமன், சக்கரத்தாழ்வார், கருடனுக்கு சன்னதிகள் உள்ளன. வைகாசி விசாகத்தில் கருடசேவை, ஆவணியில் திருக்கல்யாணம், வைகுண்ட ஏகாதசி இங்கு சிறப்பாக நடக்கும்.

காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியாக 10 கி.மீ.,

நேரம்: காலை 7:00 - 11:00 மணி மாலை 4:30 - 7:00 மணி

தொடர்புக்கு: 97918 31621

அருகிலுள்ள தலம்: கொப்புடைய நாயகி 10 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 11:00 மணி மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 99428 23907






      Dinamalar
      Follow us