sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு பெருமாள்-24

/

தினமும் ஒரு பெருமாள்-24

தினமும் ஒரு பெருமாள்-24

தினமும் ஒரு பெருமாள்-24


ADDED : ஜன 07, 2025 06:56 PM

Google News

ADDED : ஜன 07, 2025 06:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமணம் நடக்க...


கடலுார் மாவட்டம் திருவதிகையில் காட்சி தரும் சர நாராயணப் பெருமாளை வழிபட்டால் திருமணம் நடக்கும். திரிபுர சம்ஹாரத்தின் போது சிவபெருமானுக்கு வில்லைக் கொடுத்தவர் இக்கோயில் பெருமாள். இவருக்கு பிரசன்ன நரசிம்மர் என்ற ஒரு பெயரும் உண்டு. சாளக்கிராமக்கல்லினால் உருவாக்கப்பட்ட இவர் ஹேமாம்புஜ வல்லித் தாயாருடன் நின்ற

கோலத்தில் காட்சி தருகிறார். புரட்டாசி மாதம் முழுவதும் இங்கு சன்னதியில்

மின்விளக்குகள் இன்றி நெய் தீபங்கள் ஏற்றி ஒளிரச் செய்கின்றனர். இங்கு கருடாழ்வார் கை கட்டி சேவகம் செய்வது போல் காட்சி தருகிறார். நரசிம்மர் சயனக்கோலத்தில் தாயாருடன் அருள் செய்கிறார். இவருக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் இங்கு வழிபட்டுள்ளார்.

பண்ருட்டியில் இருந்து 3 கி.மீ.,

நேரம்: காலை 8:00 - 11:30 மணி மாலை 5:00 - 8:15 மணி

தொடர்புக்கு: 99940 27570, 94437 87186

அருகிலுள்ள தலம்: திருவதிகை வீரட்டேஸ்வரர் 1 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 12:00 மணி மாலை 4:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 94439 88779






      Dinamalar
      Follow us