ஆந்திராவில் 172 கிணறுகள் ஓ.என்.ஜி.சி.,க்கு சூழல் அனுமதி
ஆந்திராவில் 172 கிணறுகள் ஓ.என்.ஜி.சி.,க்கு சூழல் அனுமதி
ADDED : அக் 07, 2025 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத், ஆந்திர கடற்கரை பகுதிகளில், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு 172 கிணறுகள் தோண்ட, பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,க்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 8,110 கோடி ரூபாய் முதலீட்டில், ஓ.என்.ஜி.சி., இந்தப் பணியை மேற்கொள்ள அனுமதிக்கலாம் என சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதி களில் எட்டு இடங்களில் இதற்கான உரிமத்தை ஓ.என்.ஜி.சி., பெற்றுள்ளது.
கடலோரப் பகுதிகளில் 172 கிணறுகளை தோண்டி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுக்க துளையிடும் பணிகளை ஓ.என்.ஜி.சி., மேற்கொள்ள உள்ளது.
எனினும், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வனவிலங்கு பூங்கா, வனத்துறை நிலம் ஆகியவற்றில இந்த பணிகள் அனுமதிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.