வெளியே பாலியஸ்டர், உள்ளே பருத்தி 'டபுள் லேயர்' பின்னலாடை அறிமுகம் சீருடை, விளையாட்டு ஆடையாக பயன்படும்
வெளியே பாலியஸ்டர், உள்ளே பருத்தி 'டபுள் லேயர்' பின்னலாடை அறிமுகம் சீருடை, விளையாட்டு ஆடையாக பயன்படும்
ADDED : அக் 12, 2025 03:33 AM

திருப்பூர்:மேற்புறம் பாலியஸ்டர், உள்புறம் பருத்தியாலான பின்னல் துணிகள் மூலம் 'டபுள் லேயர்' ஆடை, கோவையில் நடந்த புத்தொழில் மாநாடு கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பள்ளி சீருடை மற்றும் விளையாட்டு ஆடையாக பயன்படுத்த ஏற்றதாக அமையும்.
பாலியஸ்டர் போன்ற செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாறினால் மட்டுமே, அடுத்தகட்ட வளர்ச்சி என்பது, இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு சாத்தியமாகும்.
குழந்தைகளுக்கான பருத்தி நுாலிழை ஆடை உற்பத்தி செய்து வரும் திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம்,மத்திய - மாநில 'ஸ்டார்ட்அப்' திட்ட வழிகாட்டுதலுடன் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது.
பருத்தி மற்றும் பாலியஸ்டர் நுால்களை கொண்டு, 'டபுள் லேயர்' பின்னல் துணியை தயாரித்தது; அதிலிருந்து ஆடைகளை வடிவமைத்து வெற்றி அடைந்துள்ளது.
பின்னலாடை ஏற்றுமதியாளர் மணிகண்டன் கூறியதாவது:
ஸ்டார்ட்அப் மூலம் புதிய முயற்சி மேற்கொண்டு 'டபுள் லேயர்' பின்னல் துணி, 2024ல் தயாரிக்கப்பட்டது. அதைக்கொண்டு, அனைத்து வகை ஆடைகளும் வடிவமைத்து வெற்றி காணப்பட்டது. இவ்வகை துணிகள், பள்ளி சீருடை, விளையாட்டு ஆடைகள் வடிவமைக்க ஏற்றதாக இருக்கும்.
ஆடையின் வெளிப்புறம் பாலியஸ்டர் பின்னல் துணி இருக்கும்; பார்க்க பளபளப்பாகவும், சுருக்கமில்லாமலும், எளிதில் வெளுத்து போகாமலும், பராமரிக்க எளிதாகவும் இருக்கும். ஆடையின் உற்புறம், பருத்தி பின்னல் துணி இடம்பெற்றிருக்கும் . இது பருத்தி ஆடை அணிந்தது போல் சவுகரியமான உணர்வை தரும்.
இந்த ஆடைகளை இனிமேல்தான் சந்தைப்படுத்த வேண்டும். வழக்கமான ஆடைகளைக் காட்டிலும் 20 சதவீதம் வரை விலை அதிகமாக இருக்கும். அதேசமயம், அதற்கேற்ற தரம், பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்கும்.
இவ்வாறு, மணிகண்டன் கூறினார்.
கோவையில் நடந்த உலக புத்தொழில் மாநாட்டில், டபுள் லேயர் ஆடைகளை காட்சிப்படுத்தி, புதிய 'பிராண்ட்' அறிமுகம்

