ADDED : ஜூன் 22, 2025 01:09 AM

மதுரையில் முருகன் மாநாட்டை நடத்த விடக்கூடாது என்பதில், தி.மு.க., அரசு தீவிரமாக இருந்தது. அதற்காக, பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். ஆனால், தடைகளை கோர்ட் வாயிலாக உடைத்து விட்டோம். வேல் யாத்திரையைக் காட்டிலும், மிகப்பெரிய எழுச்சியை தமிழகத்தில் இந்த மாநாடு ஏற்படுத்தும்.
தி.மு.க., தோல்வி மனநிலையில் இருக்கிறது. அதிலிருந்து வெளியே வருவதற்கு, பல முயற்சிகளை கையாளுகின்றனர். ஹிந்தி எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு என கூறினர். இவையெல்லாம் மக்களிடத்தில் எடுபடவில்லை. நீட் தேர்வெழுதி அதிகப்படியான மாணவர்கள், தமிழகத்திலிருந்து தேர்வு பெற்றுள்ளனர்.
தி.மு.க.,வின் ஒவ்வொரு செயலுக்கும், மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாத நிலை உள்ளது. அதனால், சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதாக மக்களிடம் கொண்டு செல்கின்றனர். ஆனால், மக்களுக்கு இது எல்லாமே தெரியும். மக்கள் வளச்சிக்காக காத்துக் கொண்டுள்ளனர். அதை பா.ஜ.,வால் மட்டுமே கொடுக்க முடியும்.
- முருகன்,
மத்திய இணையமைச்சர்

