sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவில் நிதியில் துவங்கிய கல்லுாரியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே பணி: ஐகோர்ட்

/

கோவில் நிதியில் துவங்கிய கல்லுாரியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே பணி: ஐகோர்ட்

கோவில் நிதியில் துவங்கிய கல்லுாரியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே பணி: ஐகோர்ட்

கோவில் நிதியில் துவங்கிய கல்லுாரியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே பணி: ஐகோர்ட்

54


UPDATED : நவ 26, 2024 06:45 AM

ADDED : நவ 26, 2024 03:03 AM

Google News

UPDATED : நவ 26, 2024 06:45 AM ADDED : நவ 26, 2024 03:03 AM

54


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'கோவில் நிதியில் துவங்கப்பட்ட கல்லுாரியில், ஹிந்துக்கள் மட்டுமே பணி நியமனம் பெற தகுதி உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில், சுஹாயில் என்பவர் தாக்கல் செய்த மனு:

சென்னை கொளத்துாரில் உள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உதவியாளர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2021 அக்டோபரில், அறநிலையத்துறை இணை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேர்முகத் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.

நிபந்தனை

பணியிடங்களுக்கு ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நான் பிறப்பால் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன்.

அறநிலையத்துறை விதித்துள்ள நிபந்தனையால், நேர்முகத் தேர்வில் பங்கேற்க எனக்கு தகுதிஇல்லை. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு போட்டியிட, என்னை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ''ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ''கோவில் வாயிலாக இயங்கும் கல்லுாரி, மத நிறுவனம் அல்ல; அது கல்வி நிறுவனம். கல்லுாரியில் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு, அறநிலையத்துறை நடைமுறை பொருந்தாது.

கல்வி நிறுவனத்தை நிர்வகிப்பது, மதச்சார்பற்ற நடவடிக்கை. எனவே, மத அடிப்படையில் நியமிக்க முடியாது,'' என்றார்.

அறநிலையத்துறை சார்பில் கூடுதல் அரசு பிளீடர் எஸ்.ரவிச்சந்திரன், இணை ஆணையர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.சூரியா ஆஜராகி, 'கோவில் வாயிலாக துவங்கிய கல்லுாரியில், ஹிந்துக்கள் மட்டுமே நியமிக்கப்பட தகுதி உள்ளது.

'அறநிலையத்துறை சட்டப்படி, மத நிறுவனம் என்பதால், அதன் ஊழியர்களாக ஹிந்துக்கள் மட்டுமே இருக்க முடியும். 'கோவில் நிதி வாயிலாக கல்லுாரி துவக்கப்பட்டுள்ளது. அரசின் நிதியுதவி இன்றி கல்லுாரி இயங்குகிறது' என்றனர்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி விவேக்குமார் சிங் பிறப்பித்த உத்தரவு: ஆவணங்களை பரிசீலிக்கும் போது, கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியானது, ஒரு சுயநிதி கல்லுாரி என்பதும், அரசிடம் இருந்து எந்த உதவியும் பெறாமல், மாணவர்களிடம் பெறப்படும் கட்டணம் வாயிலாக செலவுகள் மேற்கொள்ளப்பட்டு, கோவிலால் நடத்தப்படுவது என்பதும் தெரிகிறது.

தள்ளுபடி

இந்தக் கல்லுாரியை துவக்கியது கோவில் என்பதாலும், மத நிறுவனம் என்ற வரையறைக்குள் வருவதாலும், அறநிலையத்துறை சட்டம் இதற்கு பொருந்தும். எனவே, ஹிந்துக்கள் மட்டுமே பணி நியமனம் பெற தகுதி உள்ளது.

அறநிலையத்துறை சட்டப்படி, இந்தக் கல்லுாரியில் எந்த நியமனம் நடந்தாலும், அவர் ஹிந்து மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். இந்த வழக்கில் தகுதியில்லை; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us