செறிவூட்டப்பட்ட அரிசி கலவை தயாரிக்க ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே அனுமதி
செறிவூட்டப்பட்ட அரிசி கலவை தயாரிக்க ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே அனுமதி
ADDED : நவ 08, 2025 02:30 AM
சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசி கலவை தயாரித்து வழங்க, ஐந்து நிறுவனங்களுக்கு தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், அதில் ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது.
இந்த அரிசியில் ஊட்டச்சத்துக்கள் சேர்க்க, செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி என்பது, 1 கிலோ அரிசி மாவாக அரைக்கப்படும்.
அதில் இரும்புச்சத்து, 'போலிக் அமிலம், வைட்டமின் பி 12' ஆகிய சத்துக்கள் கலந்த கலவை சேர்க்கப்படும். அந்த கலவையை அரிசி வடிவில் மாற்றி, 100 கிலோ அரிசிக்கு, ஒரு கிலோ வீதம் சேர்க்கப்படும்.
அதன் தரத்தை உறுதி செய்ய, மத்திய அரசு புதிய விதிகளை, கடந்த ஜூலை 29ல் ஏற்படுத்தியது. அதன்படி, செறிவூட்டப்பட்ட அரிசி கலவை தயாரிக்க ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் ஒவ்வொன்றும், 10 டன் கலவை தயாரித்து, மாதிரியை டில்லிக்கு அனுப்ப வேண்டும்.
தரத்தை உறுதி செய்த பின், மத்திய அரசு அனுமதி அளிக்கும்.
தமிழகத்தில், நடப்பு நெல் கொள்முதல் சீசன் கடந்த செப்., 1ல் துவங்கியது. இந்த சீசனில் சராசரியாக, 34 லட்சம் டன் நெல் கிடைக்கும் என, மதிப்பீடு செய்து, 34,000 டன் செறிவூட்டப்பட்ட அரிசி கலவை தயாரித்து வழங்க, ஐந்து நிறுவனங்களுக்கு வாணிப கழகம், அக்., 7ல் அனுமதி அளித்தது.
இதுவரை, 13 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட் டுள்ளது. ஐந்து நிறுவனங்கள், தலா, 10 டன் கலவை தயாரித்து, அதன் மாதிரிகளை தர பரிசோதனைக் கு, அக்டோபரில் அனுப்பி மத்திய உணவு துறையிடம் அனுமதி கேட்டன.
தற்போது, ஒரு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.

