தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/வளர்ச்சி பற்றி சிந்திப்பது நா.த.க., மட்டுமே!

வளர்ச்சி பற்றி சிந்திப்பது நா.த.க., மட்டுமே!

வளர்ச்சி பற்றி சிந்திப்பது நா.த.க., மட்டுமே!


ADDED : ஏப் 12, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 01:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திராவிட கட்சிகள் குறிக்கோளற்ற கூட்டம்!

அ டுத்த ஒரு நுாற்றாண்டுக்குள் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெறவில்லை என்றால், மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாடு போன்ற அனைத்து நாடுகளிலும் கடும் பஞ்சம் வரக்கூடும். இவ்வகை எதிர்கால பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கவே விவசாய வளர்ச்சியை நோக்கிய பாதையில், நாம் தமிழர் கட்சி பயணிக்கிறது. தேனியில் மலை மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் வேண்டும் என அங்குள்ள காப்பு காடுகளுக்கே சென்று, ஒருங்கிணைப்பாளர் சீமான் போராடி உள்ளார்.

குடிநீர், கல்வி போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். சீமானை, 'வாயாலே வடை சுடுகிறார்' என்று கூறுவோர், சிந்தனையில்லாத கூட்டமாகத் தான் எனக்குத் தெரிகின்றனர்.

எதிர்காலத்தைக் குறித்த குறிக்கோள் இல்லாத கூட்டமாக நான் திராவிட கட்சிகளை பார்க்கிறேன். விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுயசார்பு வாழ்க்கைக்கான அடித்தளம் அமைக்க உள்ள நாம் தமிழர் கட்சிக்குத்தான் என் ஓட்டு. அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

சபரி, 20 ஒய்.எம்.ஆர்., பட்டி, திண்டுக்கல்

என் முதல் ஓட்டு தி.மு.க.,வுக்கே!:



தி.மு.க., ஆட்சியில எல்லாருக்கும் சந்தோஷம்!

தி .மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நிறைய நல்லது நடந்திருக்கு. பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை, மாணவர்களுக்கு லேப்டாப், புதுமைப்பெண் திட்டம், அரசு பஸ்களில் இலவச பயணம் என, பல திட்டங்களை பெண்களுக்காக செயல்படுத்தி இருக்காங்க. முதல்வர் ஸ்டாலின் சிறப்பா செயல்படுகிறார்.

படிக்கிற குழந்தைகளுக்கு ரொம்பவுமே இம்பார்டன்ஸ் தராங்க. நிறைய பேர் புதுசா கட்சி ஆரம்பிக்கிறாங்க. அவங்க, அரசியலை பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா அரசியலுக்கு வந்தா நல்லாயிருக்கும்.

யார் வேண்டுமானாலும் சி.எம்., ஆகலாம். ஆனா மக்களுக்கு யார் நல்லது பண்றாங்களோ, அவங்களுக்கு தான் ஓட்டு போடணும்.

அ.தி.மு.க., ஆட்சியில நமக்கு எதுவுமே நல்லது நடக்கல. ஆனா, இந்த ஆட்சியில படித்த இளைஞர்கள் முதல் இல்லத்தரசி வரையிலும் சந்தோஷமா இருக்காங்க. ஸ்டாலின் முதல்வரான பிறகு, தமிழகம் வளர்ச்சியடைந்திருக்கு. என் முதல் ஓட்டு தி.மு.க.,வுக்கு தானுங்க.



எம்.மித்ரா, 18 வால்பாறை, கோவை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us