உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 26, 2024 10:49 PM

அ நிறம் | அளவு
ஊட்டி : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு நேற்று காலை, 220 பயணியருடன் மலை ரயில் சென்று கொண்டிருந்தது. ஊட்டி மலை ரயில் நிலையத்திற்கு, 1 கி.மீ.,க்கு முன்பு, வளர்ப்பு எருமை ஒன்று தண்டவாளம் குறுக்கே சென்றது.
ஓட்டுனர் பிரேக் அழுத்தியதால், ரயிலின் பெட்டி மற்றும் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி, தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் மோதியதில், வளர்ப்பு எருமை இறந்தது.
இந்த விபத்தில், மலை ரயிலில் பயணம் செய்த, சுற்றுலா பயணியர் உட்பட, 220 பேர், எவ்வித காயம் இல்லாமல் உயிர் தப்பினர்.
