UPDATED : நவ 18, 2026 07:48 PM
ADDED : நவ 18, 2026 07:17 PM

குன்னுார்: குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், 72 இடங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதால், நாளை(நவ.19) முதல் ரயில் இயக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம், 23ம் தேதி நள்ளிரவில் பெய்த கனமழையால், மேட்டுப்பாளையம் -- குன்னுார் மலை ரயில் பாதையில், 40 இடங்களில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டது. சீரமைப்பு பணிகள் நடந்த போதும், மீண்டும் பாறைகள் விழுந்ததுடன், மண்சரிவும் ஏற்பட்டதால், 72 இடங்கள் பாதிக்கப்பட்டன.
தொடர்ந்து, தினமும், 70 ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். 6 இடங்களில் தண்டவாளங்கள் மாற்றப்பட்டன. பணிகள் நிறைவு பெற்று இன்று இரு மார்க்கமும் ரயில்கள் சோதனை ஓட்டம் நடந்தது. கடந்த, 25 நாட்கள் நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில், நாளை முதல் இயக்கப்படுகிறது.
