ADDED : அக் 08, 2025 03:59 AM

சென்னை:தமிழகம் முழுதும், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், பாதி நிறைவடைந்த நிலையில், துவக்க விழா நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று போட்டி துவக்க விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
துணை முதல்வர் உதயநிதி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி, போட்டியை துவக்கி வைத்தார். விழாவில், தமிழக கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வரும் நிலையில், துவக்க விழா தாமதமாக நடத்தப்பட்டது ஏன் என, விளையாட்டுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஒலிம்பிக் போட்டிகள் துவங்கி பாதி முடியும் நிலையில், துவக்க விழா நடக்கும்.
'அதேபோல் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்க விழா நடத்தப்பட்டது' என்றனர்.