செப்டம்பர் 1 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்
செப்டம்பர் 1 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்
ADDED : ஆக 28, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், உணவு அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் தரமாக, உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ரேஷன் கார்டு கோரிய விண்ணப்பங்களில், ஒப்புதல் அளித்தவற்றுக்கு, புதிய கார்டுகளை விரைவாக அச்சிட்டு வழங்க வேண்டும்.
செப்டம்பர், 1 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், தேவையான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். அவற்றை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

