ADDED : பிப் 18, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீயணைப்புத் துறை சார்பில், 15.34 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் 2.51 கோடி ரூபாயில் தீயணைப்பு வீரர்களுக்கான 13 குடியிருப்புகள்; கடலுார், துாத்துக்குடியில் 7.17 கோடி ரூபாயில், இரண்டு மாவட்ட அதிகாரி அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள்; அரவக்குறிச்சி, ராணிப்பேட்டை, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகியவற்றில், தீயணைப்பு நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், உள்துறை செயலர் அமுதா, காவலர் வீட்டுவசதி கழகத் தலைவர் விஸ்வநாதன், தீயணைப்புத் துறை இயக்குனர் அபாஷ்குமார் பங்கேற்றனர்.