ADDED : ஜூலை 29, 2026 06:21 AM

கோவை: தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கை மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான பெத்தி திரைப்படம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டது.
இதில், கதாநாயகனாக நடித்த பிரபல நடிகர் ராம் சரணுக்கு, சண்டை காட்சி படப்பிடிப்பின் போது, வலது கை மணிக்கட்டு பகுதியில் தசைநார்கள் கிழிந்ததோடு, குருத்தெலும்பு பாதிக்கப்பட்டது.
இதற்கு மருத்துவ சிகிச்சை பெற, கடந்த 26ம் தேதி, தன் குடும்பத்தினருடன் அவர் கோவை வந்தார். அவருக்கு, கங்கா மருத்துவமனையில், கை மணிக்கட்டு பகுதியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது.
தற்போது நலமாக இருப்பதாகவும், அவரது உடல் நலம் நன்றாக தேறி வருவதாகவும், வரும் வியாழக்கிழமை 'டிஸ்சார்ஜ ் ' செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
