வெடிகுண்டு செயலிழப்பு பிரிவில் சேர முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு
வெடிகுண்டு செயலிழப்பு பிரிவில் சேர முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு
ADDED : அக் 17, 2024 10:58 PM
சென்னை:தமிழக காவல் துறையில், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவில் பணிபுரிய, முன்னாள் ராணுவ மற்றும் துணை ராணுவப் படையினரிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.
தமிழக காவல் துறையில், பி.டி.டி.எஸ்., எனப்படும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவுக்கு, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் என, 64 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணிகளுக்கு, 50 வயதுக்கு கீழ் உள்ள, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் துணை ராணுவப்படை வீரர்கள், ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தங்களின் சுய விபரங்களுடன், தேவையான ஆவணங்களின் நகல்களுடன், காவல் துறை தலைவர், செயலாக்கம், மருதம், எண்: 17, போட் கிளப் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28 என்ற முகவரிக்கு, தபால் வாயிலாக நவ., 14ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தகுதியான விண்ணப்பத்தாரர்கள் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் எழுத்து, நடைமுறை தேர்வுகளுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பி அழைக்கப்படுவர்.